India

8 லட்ச ரூபாய் வருவாய் பெறுவோருக்கு 10% இடஒதுக்கீடா? - ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு என்பது உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டே 27% இட ஒதுக்கீட்டை அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்பது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இட ஒதுக்கீட்டு வழக்கில் தமிழ்நாடு அரசும் தனது வாதங்களை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு அரசையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதார துறை செயலாளர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இட ஒதுக்கீடு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். இடஒதுக்கீடு வழக்குகளில் முடிவுகள் எடுக்கும் போது 27% இடஒதுகீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. 27% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் முடிவுகள் எடுக்கும் போது தமிழ்நாடு அரசு உள்பட மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்கவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எஸ்.இ, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் எண்ணிக்கையில் வித்தியாசம் உள்ளது. மாநிலத்தின் கட்டமைப்பில் செயல்படும் கல்வி நிலையங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு உரிமை பாதிக்கப்படக் கூடாது என்றும் கபில்சிபல் வாதிட்டார். அப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுத்தால் அனைத்து மாநிலங்களையும் வழக்கில் இணைத்து மாநிலங்களின் வாதங்களையும் கேட்க வேண்டும் என்று சோலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

ஒன்றிய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 2019, 20 ஆண்டுகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, 10% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த இந்த ஆண்டு தடைவிதிக்கக் கூடாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் அரசியல்சாசன பிரிவு 15 பிரிவு 4 மற்றும் 5-க்கு அப்பார்பட்டவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

10% இட இதுக்கீட்டை அமல்படுத்த 2019 ஆண்டு முதல் பட்டப்படிப்பிலும் 2020 ஆண்டுமுதல் பட்ட மேற்படிப்பிலும் கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது - உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம். வழக்கு விசாரணையின் போது கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கியுள்ள ஓ.பி.சி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே 8 லட்ச ரூ வருவாய் உச்ச வரம்பை உயர்வகுப்பினருக்கும் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்சது? அதனை முடிவு செய்தவர்கள் யார்? இதற்காக ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதா..?என்று சரமாறி கேள்வி எழுப்பினர்.

இதனை கொள்கை முடிவு, அமைச்சரவை முடிவு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.

10% இட ஒதுக்கீட்டைப் பெற 8 லட்சம் ரூபாய் வருவாய் உச்சவரம்பை முடிவு செய்தது யார்? எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் சரமாறி கேள்வி.

உயர் வகுப்பினர் 10% இட ஒதுக்கீடு பெற 8 லட்ச ரூ உச்ச வரம்பு எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Also Read: “அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?” : பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி!