India
செல்ஃபி எடுக்கும்போது 140 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்.. திக்திக் நிமிடங்கள்- மீட்க உதவிய Live Location
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் கோகாக் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இதை கர்நாடக மாநிலத்தின் நயாகரா என்றும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்.2ஆம் தேதி பிரதீப் சாகர் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோகாக் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அருவியின் மேல்பகுதியில் இருந்து தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றபோது திடீரென தடுமாறி 140 அடி ஆழத்தில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணிகளை தொடருவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் பிரதீப்பிடமிருந்தும் எந்த பதிலும் இல்லாததால் அவர் இறந்திருக்கலாம் என போலிஸார் நினைத்தனர்.
இந்நிலையில் அடுத்தநாள் அதிகாலையில் தனது நண்பர்களுக்கு பிரதீப் போன் செய்துள்ளார். உடனே துரிதமாக களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் பிரதீப்புக்கு போன் செய்து லோகேஷனை சேர் செய்ய அறிவுறுத்தினர்.
பிறகு பிரதீப் ஷேர் செய்த லோகேஷனை கொண்டு தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பிறகு அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!