India
7 வயது சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா... கேரளாவில் கொடூர சம்பவம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
மனைவி தனியாகப் பிரிந்து சென்றதற்கு அவரது சகோதரி சபியாதான் காரணம் என சாஜகான் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்று அதிகாலை சபியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்து சபியா மற்றும் அரவது ஏழு வயது மகன் அல்தாப் ரியாஸை சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் தடுக்க வந்த சபியாவின் தாயாரையும் ஷாஜகான் தாக்கியுள்ளார்.
இதையடுத்து சபியாவின் மகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததைப் பார்த்த ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு பலத்த காயத்துடன் இருந்த சிறுவன் அல்தாப் ரியாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இருந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாஜகானை தேடி வருகின்றனர்.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?