India
கல்லூரி வளாகத்திலேயே மாணவியை பேப்பர் கட்டரால் குத்திக் கொன்ற சக மாணவன்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலப்பரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல்கலை படித்து வந்துள்ளார்.
அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை பேப்பரை வெட்டப் பயன்படுத்தும் கட்டரை வைத்து அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலிஸார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கல்லூரி மாணவியை சக மாணவன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !