India
தூங்கிக் கொண்டிருந்ததை பயன்படுத்தி வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர்: பெங்களூரு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜீவன்பீம நகர் பகுதியில் வாடகை காரில் பயணம் செய்த பெண் ஒருவர், அந்த கார் ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்
தனியார் நிறுவனம் ஒன்றில் பணி முடித்துவிட்டு தன் தோழி வீட்டில் இரவு விருந்து முடித்து விட்டு அதிகாலை 3:20 மணிக்கு ஆன்லைன்மூலம் வாடகை கார் புக் செய்துள்ளார்
பின்னர் சம்பந்தப்பட்ட அந்த கார் மூன்று இருபது மணிக்கு வந்து இந்த இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு அவர் கூறிய முருகேஷ் பாளையா என்ற இடத்திற்கு சுமார் இருபது நிமிடத்தில் கார் சென்றடைந்தது.
ஆனால் கார் நின்றவுடன் இளம்பெண் உறக்கத்தில் இருந்தார். அப்போது அந்த கார் ஓட்டுநர் இளம்பெண்ணை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் அந்த சமயத்தை பயன்படுத்தி ஓட்டுநர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு கார் ஓட்டுநர் மாயமாகியிருக்கிறார். இதனையடுத்து, காலை 5 மணியளவில் அந்த பெண் மூலம் போலிஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் செல்கிறது. தகவலறிந்த போலிஸார் உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
கார் ஓட்டுநர் மற்றும் புகார் கூறிய இளம்பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
Also Read
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
-
“தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளை பார்த்து எரிச்சல் அடையும் பழனிசாமி” - முரசொலி விமர்சனம்!