தமிழ்நாடு

“தனியாக இருந்த கைம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி” : போலிஸ் வலை வீச்சு!

வேளாங்கண்ணியில் தனியாக இருந்த விதவை பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நாகை மாவட்ட அதிமுக நிர்வாகி மீது மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

“தனியாக இருந்த கைம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி” : போலிஸ் வலை வீச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரதெருவைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் லியோ ஜோசப், கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வரும் ரம்யாவை அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயக மூர்த்தி அவரது வீட்டுக்குச் சென்று தினந்தோறும் தனது இச்சைக்கு இணங்குமாறு பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.

இதுகுறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த விதவை பெண் ரம்யா, அ.தி.மு.க மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி மீது நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில், பெண்ணை அவமானப்படுத்துதல், பெண்களின் அங்கங்களை வர்ணித்து கொச்சை வார்த்தைகள் கூறி உல்லாசத்திற்கு அழைத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நாகை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி தலைமறைவானதால் போலிஸார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories