India
“1991ம் ஆண்டைக் காட்டிலும் இந்தியப் பொருளாதார நெருக்கடி அச்சுறுத்தலாக உள்ளது” : மன்மோகன் சிங் வேதனை!
இந்தியாவில் 1991ம் ஆண்டு கடுமையான பொருளாதார வீழ்ச்சி இருந்தது. அப்போது மன்மோகன் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், பொருளாதார தாராயமயமாக்கலின 30ம் ஆண்டு நிறைவைக்கு குறிக்கும் விதமாக, 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் தற்போதைய நெருக்கடி அச்சுறுத்தலாக இருப்பதாக மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூறுகிறேன். அப்போது என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் நான், விக்டர் ஹியூகோவின், "ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது" என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்திருந்தேன்.
ஆனால், இன்று 30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறன். பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆனால், கொரோனா தொற்றால் சமீபகாலமாக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன். இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம்.
தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!