India

உயிருக்குப் போராடும் கணவர்.. உயிரணுவை சேமிக்க அனுமதி கேட்ட மனைவி.. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் தனது கணவரின் உயிரணுவை சேமித்து, அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய மனைவிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் நடைபெற்றதாகவும், தனது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுவதாகவும், கணவரின் உயிரணுவை சேமித்து, அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கு மருத்துவமனை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், மிகவும் அசாதாரண சூழலில் கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது உயிரணுவை மருத்துவ முறைப்படி சேகரிக்க அனுமதி அளிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அப்பெண்ணின் விருப்பப்படி, அவரது கணவரின் உயிரணு மூலம் ஐ.எவி.எஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

ஆனாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை சேகரித்துப் பாதுகாக்க முடியுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read: “ஜீன்ஸ் அணிந்ததற்காக பேத்தியை கொலை செய்த தாத்தா” - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கொடூரம்!