India
"லட்சத்தீவை பாதுகாக்க வேண்டும்" : பிரஃபுல் படேலை திரும்பப்பெறக் கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!
லட்சத்தீவுக்கு புதியநிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், லட்சத்தீவு அதிகாரி பிரஃபுல் படேலை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சினைக்குரிய அதிகாரி பிரஃபுல் பட்டேலை திரும்பப்பெற வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், லட்சத்தீவு அதிகாரி பிரஃபுல் படேலை திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் "2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை ஜனநாயகத்து எதிரானது. வெளி நபர்கள் யாரும் நிலம் வாங்க முடியாது என்ற விதியை மாற்றவும் முயற்சி நடக்கிறது. அங்கு மக்களின் அடிப்படையான மீன்பிடிக்கும் தொழிலைச் சீரழிக்கவும் படிப்படியாக முயற்சிகள் நடைபெறுகிறது.
லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் நிர்வாக அதிகாரியை நீக்க வேண்டும்" என்று தீர்மானம் மூலம் முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், லட்சத்தீவின் அமைதியை உருக்குலைக்கும் விதமாக காவி மயத்தையும், சங்பரிவார் திட்டத்தையும், கார்ப்பரேட் மயமாக்கும் திட்டங்களையும் செயல்படுத்தும் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!