India
“ஆக்சிஜன் உபகரணங்களின் வரி குறைய வாய்ப்பு” - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை!
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு வரும் மே 28 ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இதில் பல உயிர்காக்கும் மருந்துகளின் வரி, கொரோனா பயன்பாட்டுக்கான பொருள்கள் ஆகியவற்றின் வரியைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து பரிந்துரைக்குழு இன்றுகூடி ஆலோசனை நடத்தி சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஐ.ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி வரிப் பரிந்துரைக் குழுவான பிட்மெண்ட் கமிட்டி ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ள சானிடைசர், 12% உள்ள வெண்ட்டிலேட்டர், பி.பி.இ கிட், 5% உள்ள தடுப்பூசி, மாஸ்க் ஆகியவற்றின் வரிகளைக் குறைக்கக்கூடாது என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து வரும் கூட்டத்தில் விவாதிக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!