தமிழ்நாடு

“தமிழகம் வந்த கிரையோஜெனிக் கன்டெய்னர்கள்... ஆக்சிஜன் தேவை முழுமையாக தீரும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு

சீனாவிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் திட்டமிட்டபடி சென்னை வந்தடைந்தன.

“தமிழகம் வந்த கிரையோஜெனிக் கன்டெய்னர்கள்... ஆக்சிஜன் தேவை முழுமையாக தீரும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் விதமாகத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை முழுமையாகப் போக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளையும், காலி சிலிண்டர்களையும், கன்டெய்னர்களையும் இறக்குமதி செய்து உற்பத்தி பணியில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து 20 மெட்ரிக டன் கொள்ளவு கொண்ட 12 திரவ கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் சென்னை வந்தடைந்துள்ளன என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழக மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கான கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் அரசின் துரித நடவடிக்கையால் வரவழைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தைவானில் இருந்தும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேலும் 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்திற்கு வரவுள்ளன. சிங்கப்பூரில் இருந்து 1500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கப்பல் மூலமாக விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. அவை சென்னைக்கு நாளை வந்தடையும்.

முதலமைச்சரின் துரித நடவடிக்கைகளால் தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை முழுவதுமாக நிறைவேற்றப்படும்." எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories