India

தேர்தல் ஆணையம் மீது வழக்கே பதியலாம் என்ற ஐகோர்ட் கருத்தை அமோதித்த உச்ச நீதிமன்றம்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து சரிதான். அதனை கசப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அரசியலமைப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்புக்கள், பத்திரிக்கைகள் மீது புகார் தெரிவிப்பதற்கு பதிலாக சிறப்பாக பணியாற்ற முடியும்.

Also Read: “கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் - கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை" : சென்னை ஐகோர்ட் சாடல்!

பத்திரிக்கைகள் நீதிமன்றத்தின் கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது. நீதிமன்றங்களின் கருத்துக்களை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது நீதிபரிபாலனத்தையே பாதிக்கும். உயர் நீதிமன்றங்கள் உள்ளூர் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு இந்த கொரோனா பரவல் காலத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன.

எனவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Also Read: 'மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் ஒன்றும் அல்ல' : தேர்தல் முடிவைச் சுட்டிக்காட்டும் சிவசேனா!