India
கொரோனாவை தடுப்பதில் முழுவதும் தோல்வியை தழுவிய மோடி அரசு : புட்டு புட்டு வைத்த காங்கிரஸ்! #CoronaCrisis
கொரோனா பேரிடரை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளசெய்தி அறிக்கையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே மத்திய பாஜக அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவறான நிர்வாகம், திறமையிண்மை உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டிவிட்டது என்றும் உயிரிழப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைஎனக் கூறி மக்களை கை தட்ட வைத்தது, விளக்குப் பிடிக்க வைத்தது எனகேலிக் கூத்தான விஷயங்களை செய்து விட்டு இறுதியில் எந்தவித முன்னேற்பாடும், திட்டமிடலும் இல்லாத ஊரடங்கால் 3 கோடி புலம் பெயர்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி அங்கு ஏற்பட்டது போல் கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவிலும் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தும் மத்திய அரசு அதனை பொருட்படுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போதிலும் அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அளவிடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதே போன்று தடுப்பூசிகள் வீணாவதை தடுப்பதில் தோல்வி, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்காணிப்பதில் தோல்வி, பிற நாடுகளின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில் தோல்வி, பிற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் தோல்வி என அனைத்திலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !