India
ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை - புதுவை முதல்வர் குற்றச்சாட்டு!
2021ஆம் ஆண்டு ஒரு அமைதியான ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அப்போது புதுச்சேரி மக்களுக்கு 2021ம் ஆண்டு மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளது என்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல்துறையும் வருவாய்த் துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்தது.
இதனால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் புதுச்சேரியில் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர் என்று கூறிய அவர் மாநில அரசின் உறுதியான முடிவால் புதுச்சேரியில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது என்றார்.
மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையில் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் இருந்த மக்கள் உற்சாகமாக இந்த புத்தாண்டை கொண்டாடியது என்னால் பார்க்க முடிந்தது என்று கூறிய அவர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்று கூறிய அவர் 2021ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு ஒரு அமைதி ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் தொல்லைகள் இல்லாத மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறியதோடு, ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை என குற்றம் சாட்டினார்.
Also Read
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?