India

இந்தியாவில் ஊடுருவிய “உருமாறிய கொரோனா” : 25ஆக உயர்ந்தது புதிய ரக தொற்று பாதிப்பு!

தற்போது உலகத்தையே அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ், பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாகப் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதால், பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்தன.

சமீபமாக பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் தனி அறையில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உருமாறிய கொரோனா இந்தியாவில் மேலும் 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 25-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Also Read: கொரோனா திரிபு: இன்னொரு ஊரடங்கு மோசமான நிலையை ஏற்படுத்தும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!