India
“மக்கள் மத்தியில் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா?” : அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 33 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனால் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாயிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதேவேளையில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. மேலும், இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புறப்பட்ட விவசாயிகள் டெல்லியின் எல்லையில், ஹரியானா -ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாஜஹான்பூர் வந்து சேர்ந்தார்கள். அங்கே நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றைய தினம் இரண்டாவது முறையாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அப்போது விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், “வேளாண் சட்டங்களால் நன்மைகள் இருப்பதாக கூறிவிட்டு, இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறுகிறதே தவிர, சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் கூறித்து கூற மறுக்கிறது.
மேலும் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து புரிதல் இல்லை என்று கூறும் மத்திய பா.ஜ.க அமைச்சர்கள், பொதுமக்கள் மத்தியில், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் நேரடியாக விவாதிக்க தயாரா? ஒருவேளை அதுபோல விவாதம் நடத்தினால், யாருக்கு அதிகம் புரிதல் உள்ளது என்பதை மக்கள் உணர்ந்துக்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!