India
மக்களே உஷார்... வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு : போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடி அம்பலம்!
சென்னையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஒரு நிறுவனம் தொடர்ந்து பலரை மோசடி செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்கள் வந்தது. அப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தனது மனைவி ராணி மற்றும் சிலருடன் சேர்ந்து ‘sailors maritime academy’ என்கின்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
மேலும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி போலி நிறுவனமான sailors maritime academy நிறுவனம் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்த மோகன்தாஸ் அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது கூட்டாளிகளான கார்த்திக் மோகன், ராஜ், பார்த்திபன் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், மேலும் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முழுமையான விசாரனைக்கு இதற்கு முன்பு எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Also Read
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!