தமிழ்நாடு

‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி!

ஆன்லைன் ஆர்டரில் வந்த பொருளுக்கு சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி மோசடி செய்யும் கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர்.

‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் காந்தி நகரில் வசிப்பவர் சுரேஷ். வீட்டின் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் சுரேஷ் பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி ஸநாப் டீல் எனும் ஆன்லைன் நிறுவனத்தில் ரூபாய் 350 மதிப்புள்ள போர்வையை ஆர்டர் செய்துள்ளார். 

ஆர்டர் செய்த போர்வை வீட்டிற்கு வந்து கடந்த 20 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சுரேஷ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அதில் பேசிய நபர் SHOPCLUES.COM நிறுவனத்தில் இருந்து உதவி மேலாளர் சுஜித் பேசுவதாக கூறியுள்ளார். 

பின்னர் நீங்கள் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு ரூபாய் 12,80,000 மதிப்புள்ள மகேந்திரா எக்ஸ் யூ வி 500 கார் பம்பர் பரிசு விழுந்துள்ளதாகவும், ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதை சுரேஷ் நம்புவதற்காக சுரேஷின் வாட்ஸ் ஆப் என்னிற்கு தொலைபேசியில் பேசிய உதவி மேலாளர் சுஜித் பணிபுரியும் அடையாள அட்டை, பம்பர் பரிசில் விழுந்துள்ள கார் சுரேஷ்க்கு வழங்குவதற்காக அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பது போன்ற புகைப்படம் அனுப்பியுள்ளார்.

‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி!

மேலும், காரின் விலை ரூபாய் 12,80,000 அதில் ஒரு பங்கு டேக்ஸ் கட்ட வேண்டும் என கூறி ரூபாய் 12 ஆயிரத்து 800யை தங்களது வங்கி கணக்கில் உடனடியாக போட வேண்டும் என்பதற்கான தகவல்களையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

அதேபோல் கார் வேண்டுமென்றாலும் கார் பெற்றுக்கொள்ளலாம் இல்லை என்றால் பணமாக வேண்டுமென்றாலும் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய மோசடி நபர் சுஜித் முதலில் 12,800யை உடனடியாக அனுப்பும்படி சுரேஷிடம் கூறியுள்ளார். 

தொலைபேசியில் ஆசை வார்த்தை கூறும் நபரின் வார்த்தையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டதால் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்ற சுரேஷ்,செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி!

போலிஸார் சுரேஷ் கொடுத்த மேலாளர் சுஜித் எண்ணுக்கு பேசு போதே, போலிசார் பேசுவதை அறிந்து  செல்போனை ஸ்சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அப்பொழுதுதான்  மோசடி செய்யும் கும்பல் என்று தெரிய வந்துள்ளது. 

இது போல் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களின் விவரங்களை சேகரித்து இது போல் மோசடி நடந்து வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories