India

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்து போலிஸ் விசாரணை!

கேரள மாநிலம் பத்தணம்திட்டா பகுதியில் இருந்து இரண்டு பெண்கள் கொரோனா முதற்கட்ட சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், 45 வயது உள்ள பெண்ணை கோழஞ்சேரி மருத்துவமனையில் கிச்சைக்காக அனுமதித்து விட்டு, 20 வயதுள்ள பெண்ணை பந்தளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நெளஃபல் என்ற ஆம்பலன்ஸ் ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆம்புலன்ஸில் கொரோனா பாதித்த 20 வயது பெண்ணும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நெளஃபல் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில்,நெளஃபல் பந்தளம் மருத்துவமனைக்கு முக்கிய சாலைகள் வழியாக செல்லாமல், ஆறன்முளா பகுதி வழியே விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கப்பட்ட பகுதி வழியே சென்று அங்கு ஒதுக்குப்புறமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

வாகனத்தை இருட்டாக இருக்கும் பகுதியில், நிறுத்தியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது, பின் பக்கமாக வாகனத்திற்குள்ளே நுழைந்த நெளஃபல், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று காலில் விழுந்து நெளஃபல் கெஞ்சியுள்ளான். அப்போது அந்தப் பெண், நெளஃபல் பேசியதை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து, நெளஃபல் பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டதுமே, அந்த பெண் அங்கிருந்த போலிஸாரிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை ஆதாரத்துடன் கூறியுள்ளார். இதனையடுத்து அடுத்த 10 நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நெளஃபலை போலிஸார் கைது செய்தனர்.

மேலும், அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிஸார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்ட நெளஃபலை போலிஸார் விசாரிக்கவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சார் கே.கே.சைலஜா உத்தரவிட்டார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் போலிஸார், கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நெளஃபல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பந்தளம் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இரவு நேரத்தில் ஆம்பலன்ஸில் அபாய நிலையில் உள்ள நோயாளிகளை மட்டுமே அழைத்துச் செல்லவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செங்கல்பட்டில் தீ பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்: தமிழகத்தில் தொடரும் ஆம்புலன்ஸ் விபத்து - என்ன காரணம்?