இந்தியா

செங்கல்பட்டில் தீ பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்: தமிழகத்தில் தொடரும் ஆம்புலன்ஸ் விபத்து - என்ன காரணம்?

தென்காசியை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்த மூதாட்டி ஒருவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளனர்.

ஆம்புலன்ஸை நிறுத்தி மூதாட்டியை இறக்க முற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் வாயு கசிந்து தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து மூதாட்டியை தூக்கியபடி ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் அங்கிருந்து தப்பினர்.

செங்கல்பட்டில் தீ பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்: தமிழகத்தில் தொடரும் ஆம்புலன்ஸ் விபத்து - என்ன காரணம்?

தீ வேகமாகப் பரவிய நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் தீயைப் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு போலிஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், கடந்த வாரம் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியை மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல புறப்பட்ட ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தால், மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

செங்கல்பட்டில் தீ பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்: தமிழகத்தில் தொடரும் ஆம்புலன்ஸ் விபத்து - என்ன காரணம்?

ஆம்புலன்ஸ் சரியாக பரமாரிக்கததால் தொடர்ந்து இதுபோல தீ விபத்து ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் ஆம்புலன்ஸ் பற்றக்குறையால் இடைவிடாது ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்பட்டுவதால், இந்த பாதிப்பு தொடர்வதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு தீ விபத்து எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய முதன்மை செயல் அதிகாரி செல்வகுமார் தலைமையில், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்க சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories