India
கேள்வி நேரம் ரத்து : எம்.பி-க்களின் எதிர்ப்பை அடுத்து எழுத்துப்பூர்வமாக கேள்வியை அனுப்ப அறிவுறுத்தல்!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது கேள்வி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் தினமும் 4 மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் ஆறு மாதங்களுக்கு பிறகு வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.
வார விடுமுறை நாட்கள் உள்பட தொடர்ச்சியாக 18 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்நாள் தவிர மற்ற நாட்களில் மாநிலங்களவை காலை 9 மணி முதல் ஒரு மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் 7 மணிவரை நடைபெறும்.
இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாடாளுமன்றம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலுமே கேள்வி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றச் செயலகம் உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகளை அனுப்பியுள்ளது. கேள்வி நேரத்தை முழுமையாக ரத்து செய்வது ஜனநாயகத்தின் குரல்வளையை வேரோடு அறுத்தெரிவதற்கு சமமாகும் என எதிர்ப்புகள் எழுந்தன.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள், சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் உரிமையை கூட ரத்து செய்வதென்பது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என தி.மு.க, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, வழக்கமாக வழங்கப்படும் எழுத்துமூலமான பதில்கள் தடையில்லாமல் வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலகம் சார்பில் பதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எம்.பி.க்கள் கேட்க விரும்பும் கேள்விகளை நாளை முதல் துறைவாரியாக நாடாளுமன்ற செயலகங்களுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விகளுக்கான பதில்கள், செப்., 14 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் துறை வாரியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!