இந்தியா

“கேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK Chief MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நாடுமுழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்புக் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 18 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான வெளியான அறிவிப்பில், முதல்நாள் தவிற மற்ற நாட்களில் மாநிலங்களவை காலை 9 மணி முதல் ஒரு மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் 7 மணிவரை நடைபெறும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாடாளுமன்றம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா பெருந்தொற்றைப் பயன்படுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலுமே முழுமையாக கேள்வி நேரத்தைத் ரத்து செய்து மோடி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றச் செயலகம் உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகளை அனுப்பியுள்ளது.

கேள்வி நேரத்தை முழுமையாக ரத்து செய்வது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முன்னெப்போதும் இல்லாத இந்த பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில், வெளிப்படையான தகவல்களை குடிமக்கள் அறிந்துகொள்ள கேள்வி நேரம் மிக முக்கியமானதாகிறது.

கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும். இம்முடிவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories