India
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து: எதிர்க்கட்சிகளின் ஜனநாயக குரல் வளையை நெரிக்க மோடி அரசு புது திட்டம்!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது கேள்வி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் தினமும் 4 மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் ஆறு மாதங்களுக்கு பிறகு வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. வார விடுமுறை நாட்கள் உள்பட தொடர்ச்சியாக 18 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்நாள் தவிற மற்ற நாட்களில் மாநிலங்களவை காலை 9 மணி முதல் ஒரு மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் 7 மணிவரை நடைபெறும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாடாளுமன்றம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலுமே கேள்வி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றச் செயலகம் உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகளை அனுப்பியுள்ளது.
கேள்வி நேரத்தை முழுமையாக ரத்து செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை வேரோடு அறுத்தெரிவதற்கு சமமாகும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள், சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் உரிமையை கூட ரத்து செய்வதென்பது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!