India
அயோத்தியில் ஆக.,5 பூமி பூஜை: அத்வானிக்கு அழைப்பில்லை.. அமித்ஷாவுக்கு கொரோனா.. இடியாப்ப சிக்கலில் பாஜக?
நாடு முழுவதும் கொரோனா தொற்று தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வரும் வேளையில், அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்காக கட்டுமான பூஜை நடத்த உத்தர பிரதேச மாநில அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதில், பிரதமர் மோடி கலந்துக்கொள்ள இருக்கிறார்.
அவரது வருகைக்காக அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்காக பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுக்காமல் உள்ளது.
Also Read: கொரோனாவால் உ.பி அமைச்சர் பலி : ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு மும்முரம் காட்டும் யோகி அரசு!
இந்த விவகாரம் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் உத்தர பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில், அயோத்தியில் உள்ள புரோகிதருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அது போல, இன்று அம்மாநில தொழில்துறை அமைச்சர் கமலா ராணி வருணும் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கிறார். தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Also Read: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா.. இப்போதாவது கொரோனாவின் வீரியத்தை உணருமா மோடி அரசு?
இவ்வாறு தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜகவினர் அமோகமாக திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு பங்கம் விளைக்கும் விதமான செய்திகளே வெளி வருகிறது. இது பெரும் இடியாப்ப சிக்கலையே பாஜகவினருக்கு ஏற்படுத்தியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!