இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள வீரரகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதேச்சமயத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
அவ்வகையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியதாவது , “எனக்கு ஆரம்பகட்ட அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டேன். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்தி பரிசோதித்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.”என்று கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், அது சமூக அளவில் பரவவில்லை என்றும் மத்திய பாஜக அரசு கூறி வரும் நிலையில், இந்தியாவின் உயர்மட்ட பதிவிகளில் ஒன்றான உள்துறை அமைச்சர் பதவியை வகிக்கும் அமித் ஷாவுக்கே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தொற்றின் வீரியத்தை காட்டுகிறது.