India

“கடும் பொருளாதார நெருக்கடியால் 74% விற்பனை வீழ்ச்சி” : பா.ஜ.க ஆட்சியில் சில்லரை விற்பனையாளர்கள் வேதனை!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணாமாக நாடுமுழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் நாட்டில் சில்லரை விற்பனையானது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியா முழுவதும் சிறிதும் பெரிதுமான 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வுசெய்து இதுதொடர்பான அறிக்கையை இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம், (Retailers Association of India- RAI) வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய பொருளாதாரச் சந்தையின் அடித்தளமான நுகர்வோர் சந்தையும், சில்லறை வர்த்தகமும் கொரோனா பாதிப்பால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டள்ளது.

அதனால், முதல் காலாண்டில் சில்லரை விற்பனைச் சந்தை சுமார் 74 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஜூன் மாதத்தின் கடைசி 15 நாட்களில் கடைகளை அதிகம் திறந்து வைத்திருந்த போதிலும் கடந்த ஆண்டை விட 67 சதவிகிதம் வர்த்தகம் சரிந்துள்ளது.

குறிப்பாக, ஜூன் 15 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான வர்த்தகத் துறைகளின் விற்பனை அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 64 முதல் 70 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் பெரிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் 59 சதவிகித விற்பனை பாதிப்பையும், சிறிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் 69 சதவிகித விற்பனை பாதிப்பையும் சந்தித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை?” : ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி!