இந்தியா

“மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை?” : ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி!

மக்கள் செலவில் லாபம் ஈட்டும் எம்.என்.சி / நிறுவனங்களுடன் பா.ஜ.க அரசாங்கத்தின் "தூய்மையற்ற தொடர்பு" அம்பலமாகியுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

“மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை?” : ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அதிகம் பயன்படுத்திவரும் மாஸ்க், சானிடைசரை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுபலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் செலவில் லாபம் ஈட்டும் எம்.என்.சி / நிறுவனங்களுடன் பா.ஜ.க அரசாங்கத்தின் "தூய்மையற்ற தொடர்பு" அம்பலமாகியுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்கள் செலவில் லாபம் ஈட்டும் எம்.என்.சி / நிறுவனங்களுடன் பா.ஜ.க அரசாங்கத்தின் "தூய்மையற்ற தொடர்பு" அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க், சானிடைசரை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் தற்போது மாஸ்க், சானிடைசரை எந்த எம்.ஆர்.பி விலையிலு விற்கமுடியும்.

ஜூன் 16 அன்று, பா.ஜ.க அரசு கூறியது- ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சானிடைசர் பயன்படுத்துவோர் தேவை அதிகரிக்கக்கூடும். மேலும் இது டிசம்பர் 31, 2020 வரை இசி ஆணைய சட்டத்தின் கீழ் தொடரப்பட வேண்டும். அதன் தொடர்சியாக மாஸ்க், சானிடைசர் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யப்படும் என்றனர். ஜூன் 16 அன்று முதல் 2020 டிசம்பர் 30 வரை மாஸ்க், சானிடைசர் “அத்தியாவசிய பொருட்கள்” என்று சொன்னது அடுத்த 15 நாட்களில் ஏன் மாற்றப்பட்டது?

மக்களிடம் அதிக விலை வசூலிக்க வேண்டும் என்று அரசு ஏன் விரும்புகிறது? கோவிட் -19 உடன் போராட இந்த அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை? கோவிட் மீதான போர் முடிந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories