India

கொரோனா சிகிச்சைக்காக 100 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா !

கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களை இந்தியாவிற்கு அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதற்காக பிரதமர் மோடி ட்ரம்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிகாரி ஒருவர் கடந்த மாதம் இதுபற்றி பேசுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா 200 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருக்கிறது என கூறினார்.

அதன்படி, அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் வென்டிலேட்டர்களின் முதல் தொகுதி நேற்று முன்தினம் இந்தியா வந்து சேர்ந்தது. இந்த தரம்வாய்ந்த வென்டிலேட்டர்களை அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த சோல் மெடிக்கல் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.

சிகாகோ நகரில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்களை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத்ஜே ஜஸ்டரிடம் ஒப்படைத்தது. இவற்றை இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகளிடம் ஜஸ்டர் வழங்கினார். இந்த சுவாசக் கருவிகள் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Also Read: உயிர் காக்கும் மருந்தாக மாறிய ‘டெக்ஸாமெதசோன்’: கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆஸ்துமா மருந்து!