இந்தியா

உயிர் காக்கும் மருந்தாக மாறிய ‘டெக்ஸாமெதசோன்’: கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆஸ்துமா மருந்து!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்படும் ‘டெக்ஸாமெதசோன்’ என்ற மருந்து பதிக்கப்பட்டவர்களுக்கு முக்கிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளனர்.

உயிர் காக்கும் மருந்தாக மாறிய ‘டெக்ஸாமெதசோன்’: கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆஸ்துமா மருந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலிவான விலையில், மிக அதிகமாகவும் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு டெக்ஸாமெதசோன் என்ற மருந்து ஆர்த்ரிட்டிஸ் போன்ற நோய்களில் வீக்கத்தைக் குறைக்கவும், கொரோனா நோய்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி மரண விகிதத்தைக் குறைக்கவும் உதவுவதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இவை உடனடியாக அளிக்கப்படவேண்டும் எனவும் இதுவரையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, வெண்ட்டிலேட்டர்களில், ஆக்சிஜன் உதவி கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின் போது அளிக்கப்படும் இம்மருந்து உயிர்காக்கும் மருந்தாக செயல்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தீவிர நோய் பாதிப்பில் வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகள் 8 இல் ஒருவரை இம்மருந்து காப்பாற்றுகிறது. அதேப்போல், ஆக்சிஜன் சப்போர்ட்டில் மட்டுமே இருக்கும் 25 கோவிட் நோயாளிகளில் ஒருவர் உயிர் பிழைப்பதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் மருந்தாக மாறிய ‘டெக்ஸாமெதசோன்’: கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆஸ்துமா மருந்து!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இம்மருந்து பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸாமெதசோன் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இம்மருந்து இந்திய விலைப்படி 500 ரூபாய் மட்டுமே. இந்த மருந்தை பொருத்தமான நேரத்தில் அளிக்க வேண்டும். லேசான தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மருந்தால் தற்போது மருத்துவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories