India
“போலிஸ் கெடுபிடி - அறுவடை செய்த காய்கறியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்” : புதுச்சேரியில் நிகழ்ந்த சோகம்!
புதுச்சேரியில் உள்ள காட்டேரிக்குப்பம், சந்தை புதுகுப்பம், மண்ணாடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் விவசாய சாகுபடிகள் நடந்து வருகின்றது. இந்த பகுதிகளில் கத்திரிக்காய், புடலங்காய், மிளகாய், அவரை மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விளைந்த காய்கறிகளை அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் காய்கறிகளை பறித்துக்கொண்டு விவசாயிகள் சந்தைக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு சிறமங்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக விளைவித்த பொருட்களுக்கு சரியான லாபமே கிடைக்காத நிலையில், காய்கறிகளை விவசாயிகள் பறித்து சந்தைக்கு எடுத்து வர முயன்றால் போலிஸார் தடுக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, காட்டேரிக்குப்பம் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் பயிரிட்டு புதுச்சேரி அங்காடிக்கும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த காய்கறிகளை வெளி மாவட்டத்திற்கு அனுப்ப தடைவித்தித்துள்ளனர்.
இதனால் காட்டேரிக்குப்பத்தில் அறுவடை செய்த உஜாலா கத்திரிக்காயை ஏற்றி செல்ல வந்த வாகனத்தை போலிஸார் திருப்பி அனுப்பினர். இதனால் விற்க முடியாமல் வீணாகிய கத்திரிக்காயை மூட்டை மூட்டையாக விவசாயிகள் குப்பையில் கொட்டிய பரிதாபம் நடந்துள்ளது. அரசு விவசாய பொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்யவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!