India
“அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கை கழுவும் பழக்கத்தில் பின்தங்கிய இந்தியா” : அதிர்ச்சித் தகவல்!
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன் தினம் வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில், 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 677 இந்தியர்கள், 47 வெளிநாட்டினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்படைந்த நாடுகள் அனைத்துமே, கொரோனாவைக் கட்டுப்படுத்த கைகழுவுவது முக்கியம் என்றும் கைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், கை கழுவும் பழக்கத்தை தீவிரமாகக் கடைபிடிக்கும் நாடுகள் மற்றும் அலட்சியமாக உள்ள நாடுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
அதில், சவுதி அரேபியா மக்களில் 97 சதவீதம் பேர் கை கழுவும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளனர். அதனையடுத்து கைகழுவும் பழக்கத்தில் கவனம் செலுத்தும் நாடாக, போஸ்னியா, அல்ஜீரியா, லெபனான், பப்புவா நியூ கினியா போன்றவை உள்ளன. இதில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.
அதேபோல், பாகிஸ்தான் 16-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-வது இடத்திலும் வங்கதேசம் 26-வது இடத்திலும் உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங், ஆகிய நாடுகள் பின்தங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசாங்கம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், மக்கள் சுகாதாரத்தோடு இருப்பதை உறுதி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!