India

“அரசு இழப்பீடு வழங்காவிட்டால் 90% பேர் வேலையிழப்பார்கள்” : மோடி அரசை எச்சரிக்கும் ராஜகோபாலன்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தனது தீவிரத்தனமையைக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்றும், மீறிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல மாநில அரசிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே இருந்தன் பொருளாதார பாதிப்பில், கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பேரிழப்பை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சில்லரை விற்பனைத் துறையில் வருவாய் இழப்புகள் அதிகரித்துள்ளதோடு, இத்துறையில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது என இந்திய சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (RAI) தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, வி-மார்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஃபியூச்சர் குரூப், அவெனியூ சூப்பர் மார்ட் உள்ளிட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய சில்லரை வர்த்தகத் துறையில் மொத்தம் 60 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அரசாங்கம் தலையிடாவிட்டால்; அரசு தரப்பிலிருந்து இத்துறையினருக்கு இழப்பீடு எதுவும் வழங்காவிட்டால், 4 மாதங்களில் 40 சதவிகிதம் பேர் வேலையிழப்பார்கள். அடுத்த ஒன்பது மாதங்களில் 90 சதவிகிதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும்.

Also Read: “மோடி - அமித்ஷாவின் மதவாத வன்முறையால் இந்தியப் பொருளாதாரம் மேலும் பேரழிவை சந்திக்கும்”: யெச்சூரி ஆதங்கம்!

எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு வேலையிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா முன்னெச்சரிக்கை : பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்! #Corona Alert