Corona Virus

கொரோனா முன்னெச்சரிக்கை : பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்! #Corona Alert

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 519 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்களிடையே அச்சம் பரவி வருகிறது. நோய் பரவாமல் தடுக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா முன்னெச்சரிக்கை : பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்! #Corona Alert

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

* இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு மக்கள் வெளியே வர தடை.

* கொரோனா பாதித்தவர்கள் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் வீட்டில் தனித்தே இருக்க வேண்டும்.

* மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின்போது வெளியே வர அனுமதியில்லை.

* வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது சாத்தியம்.

* கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது.

* கொரோனா வைரஸ், காட்டுத்தீ போல நாட்டில் பரவும். 21 நாட்கள் தனிமைப்படுத்தாவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடுவோம்.

கொரோனா முன்னெச்சரிக்கை : பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்! #Corona Alert

* ஒவ்வொரு குடிமகனும், தந்தை, தாய், மகன், நண்பன் என அனைவரும் இதை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஏன் இந்த நாட்டின் பிரதம மந்திரியான நானுமே கடைபிடித்தாக வேண்டும்.

* இதை எத்தனை தீவிரமாக கடைபிடிக்கிறோமோ அத்தனை தீவிரமாக இந்த வைரஸை ஒழிக்க முடியும்.

* 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

* முழு ஊரடங்கால் நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்கும். ஆனால், வேறு வழி இல்லை.

* மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories