India
நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை என்பதுதான்.
கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூக இடைவெளி மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். டெல்லியில் கரோனா வைரஸுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், 5 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவி்ட்டுள்ளதாவது, “டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவி்ல்லை.
இதற்காக நாம் இப்போது மகிழ்ச்சியடையக் கூடாது. இன்னும் மிகப்பெரிய சவால் இருக்கிறது.சூழல் இன்னும் நமது கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத செய்தி நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசுகள் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!