India
“மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உறுதி செய்ய வேண்டும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
மத்திய அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 75 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈராோடு மாவட்டத்தையும், புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனோ வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை 31.3.2020 வரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும்,
தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
Also Read
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!
-
11 சவரன் நகை திருட்டு வழக்கு : த.வெ.க பெண் நிர்வாகி கைது!