உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கிவருகிறது. கொரோனா வைரசால் நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உலகளவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளனர். 3,06,892 பேர் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெரும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 75 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், டெல்லி, சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈராோடு மாவட்டத்தையும், புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று, அத்தியாவசிய பொருகள் கிடைப்பதை உறுதி செய்வதை தவிர, வரும் 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.