India
கட்டாய சமரச தீர்வு மையம் அமைக்க சட்டம் இயற்ற வேண்டும் - தலைமை நீதிபதி பாப்டே வலியுறுத்தல்!
உலகமயமாக்கல் காலத்தில் சமரசம் ( Arbitration in the Era of Globalisation) என்ற பெயரில் மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்திய நடுவர் மன்றம், வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பங்கேற்று பேசினார்.
அதில், “சர்வதேச வர்த்தகம், முதலீடு, உலகளாவிய உட்கட்டமைப்பு போன்றவற்றில் உருவாகும் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வை அளிப்பதில் நடுவர் மன்றங்களே முக்கிய பங்காற்றுகின்றன. அமைப்பு ரீதியிலான சமரச மையங்களை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் சமரச கவுன்சில் அமைக்கப்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
வழக்குகள் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பாகவே அவற்றுக்கு வெளியில் மத்தியஸ்த தீர்வு காண்பதை கட்டாயமாக்கும் வகையிலான விரிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அவ்வாறு மத்தியஸ்த தீர்வு நடைபெற்றால் நீதிமன்றத்துக்கும், பாதிக்கப்படும் தனிநபர்கள், அமைப்புகளுக்கும் கால விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும்” என்றார் எஸ்.ஏ.பாப்டே.
தொடர்ந்து பேசிய அவர், உலகமயமாக்கலில் இந்தியா தொடர்பான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. இது போன்ற செயல்பாடுகளின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க மத்தியஸ்த தீர்வு மையமே உதவி புரியும் எனக் கூறினார்.
Also Read
-
“இது பேரறிஞர் அண்ணா பற்றவைத்த தீ! தலைமுறை, தலைமுறையாக பரவிக்கொண்டிருக்கும் தீ!”: துணை முதலமைச்சர் பேச்சு!
-
“இதுவரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 விநியோகம்!” : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!
-
“தமிழ்நாடு குறள் நாடு” - குறள் பரப்பும் முதலமைச்சர் ஆசான் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!