India
“கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் : பொருளாதாரத்தை சீர்செய்ய வழியின்றி தவிக்கிறது மோடி அரசு” : ப.சிதம்பரம்
மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தாலும், மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் அதை மறுத்தே வருகின்றனர்.
குறிப்பாக ஜி.எஸ்.டி வரி, ஜி.டி.பி சரிவு போன்ற பல்வேறு காரணிகளால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஈரான் - ஈராக் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இந்த மோதல் போக்கு முற்றி உலகப்போருக்கு வழிவகை செய்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இருநாடுகளிடையே நடக்கும் சண்டையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. கச்சா எண்ணெய்யின் இந்த விலை உயர்வு ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு மேலும் பலத்த அடியாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், “அமெரிக்கா - ஈரான் பிரச்னையால் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அது இன்னும் அதிகமாகக் கூடும்.
இந்த விலை உயர்வால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும். அதுமட்டுமின்றி, 1991ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நடந்த கடும் சரிவைவிட தற்போது அதிக அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இறக்குமதியை பொறுத்தமட்டில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 8.37 விழுக்காடும், ஏற்றுமதியில் 2.21 விழுக்காடு சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னை உருவாகும். இதனை சரி செய்ய, வழி தெரியாமல் மோடி அரசாங்கம் தவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!