இந்தியா

'மோடி ஆட்சியில் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் அச்சம்’ : உலக பொருளாதார நிபுணர் ‘பகீர்’ !

இந்தியாவின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவதாக பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கய் சோர்மன் தெரிவித்துள்ளார்.

'மோடி ஆட்சியில் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் அச்சம்’ : உலக பொருளாதார நிபுணர் ‘பகீர்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கூறி வந்தாலும், மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் அதை மறுத்தே வந்துள்ளது. இந்நிலையில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான கய்சோர்மன், இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இந்திய பிரதமர் மோடி ஆரம்பத்தில்தான் இந்தியத் தொழில் முனைவோர்களுக்கு சாதகமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதில் ‘மேக் இன் இந்தியா’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், மேக் இன் இந்தியா திட்டம் அறிவிப்பாக போனதே தவிர வேறு எந்த மாற்றம் நிகழவில்லை.

அதற்கு காரணம், திடீரென்று நாட்டின் பொருளாதாரம் சார்ந்த நோக்கத்தில் இருந்து விலகி தனது அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியதுதான். குறிப்பாக மோடியின் அரசியல் நடவடிக்கைகளால் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. அதன் எதிரொலியாக தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதில்லை.

கய் சோர்மன், பிரெஞ்சு பொருளாதார நிபுணர்
கய் சோர்மன், பிரெஞ்சு பொருளாதார நிபுணர்

மோடியின் அரசியல் சார்ந்தோ நடவடிக்கை பற்றியோ, குடியுரிமைச் சட்டம் சார்ந்தோ நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவருடைய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு அரசின் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் அந்த நம்பிக்கை சிதைந்து வருகிறது. இது மிக கவலைக்குரிய விஷயமாகும்.

அதுமட்டுமல்ல, அரசு நாட்டின் வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஜி.டி.பி கணக்கீடும் இந்தியாவில் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் எவையும் நம்பத் தகுந்தவையாக இல்லை.

'மோடி ஆட்சியில் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் அச்சம்’ : உலக பொருளாதார நிபுணர் ‘பகீர்’ !

கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சிக்கு பிறகு இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையை தவறவிட்டுள்ளனர். நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% வீழ்ச்சி அடைந்துள்ளது.

முதலீடு குறைந்துள்ளது. நுகர்வும் குறைந்துள்ளது. வேலையின்மையும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில் கிராமப்புற மக்களின் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது. வறுமை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என கய் சோர்மன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories