India

#CAAProtest | இணையத்தை முடக்கும் அரசு – ஆஃப்லைனில் தகவல் பரிமாற உதவும் 6 செயலிகள்!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் வழுவான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்க காரணமே இணையத்தில் பரவும் மத்திய பா.ஜ.க மற்றும் போலிஸின் அராஜகங்கள் குறித்த வீடியோ, செய்திகள் தான். ஜாமிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் போலிஸாரின் வன்முறைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததும் சமூக ஊடங்களே.

இந்த தகவல் பரவலை தடுக்க போராட்டம் நடைபெறும் இடங்களில் செல்போன் இணையதள சேவைகளை நிறுத்துவதை அரசாங்கம் வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருபடி மேலச் சென்று டெல்லியில் இணையதள சேவை மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ், வாய்ஸ் கால்கள் போன்ற அனைத்து வகையான தொலைபேசி சேவைகளை அரசாங்கம் துண்டித்துள்ளது. இதனைத் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, உலகிலே அதிக இணைய சேவை முடக்கப்பட்டது இந்தியாவில் தான் என்று 'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' என்ற இணையதளத்தின் தரவு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டிருந்ததாக அந்த இணையதளத்தின் தரவு குறிப்பிட்டுள்ளது.

போராடும் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் இந்த சூழலில் இணைய சேவை முடக்கப்பட்டாலும் மக்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய வழிவகை உண்டு என்ற அரோக்கிய தகவலும் அதற்காக சில நிறுவனங்கள் மொபையல் ஆப் வெளியிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சில செயலிகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். அந்த செயலிகள் மூலம், இணைய இணைப்பு இல்லாமல் கூட தங்களின் கருத்துகளை பிறருக்குத் தெரிவிக்கலாம்.

FireChat – என்ற செயலி மூலம் பயனர்கள் இணையம் அல்லது மொபைல் தொலைபேசி இணைப்புகள் இல்லாமல் அருகிலுள்ள மொபைல்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

இந்த செயலி ,அருகில் உள்ளவர்களை இணைத்துக்கொள்ள புளூடூத் மற்றும் வை-ஃபை பயன்படுத்துகிறது. இதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள புளூடூத் பயனாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். புளூடூத் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பயனாளருடன் மட்டுமே இணைய முடியும். ஆனால், ஃபையர் சேட் செயலி மூலம் இருவருக்குள்ளான தகவல் பரிமாற்றம், அருகில் இருக்கும் அடுத்தடுத்த நபர்களை சேர்த்து அதிகரித்துக் கொண்டே போகும். இதன் மூலம் புளூடூத் ரேஞ்சைத் தாண்டி இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பயனாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது ஃபயர்ச்சேட்.

Serval Mesh - அடுத்ததாக, செர்வல் மெஷ். இந்த செர்வல் மெஷ் மென்பொருள் மூலம் தொலைபேசியின் வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிற தொலைபேசிகளுடன் தொடர்புகொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, அதில் உள்ள ‘Everyone’ mode என்ற வசதி மூலம் நீங்கள் தொடர்பு கொண்டுள்ள பகுதியில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட இது சமூக ஊடகத்தை போல செயல்படுகிறது.

அதுமட்டுமின்றி, கைபேசி தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும் கூட, இது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளையும், எஸ்.ம்.எஸ் செய்திகளை அனுப்ப வழிவகை செய்கிறது. மேலும் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த மென்பொருள் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

Signal Offline Messenger - சிக்னல் ஆஃப்லைன் மெசஞ்சர்

சிக்னல் ஆஃப்லைன் மெசஞ்சர் என்ற செயலி வைஃபை மூலம் நேரடியாக பயன்படுத்தமுடியும். இந்த பயன்பாட்டின் மூலம், ஒருவர் 100 மீட்டர் வரம்பில் இணையம் அல்லது உள்ளூர் நெட்வொர்க்குகள் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், பயனர்கள் ஆடியோ, செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ செய்திகளை அருகிலுள்ள பயனர்களுக்கு வைஃபை டைரக்ட் மூலம் பகிரலாம். இதில் பகிரப்படும் தகவல் அணைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என அந்நிறுவனம் நிறுவனம் கூறுகிறது.

இந்த செயலி ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் செயல்படும். இந்த ஆஃப்லைன் சிக்னல் பயன்பாட்டை பெங்களூரைச் சேர்ந்த கோகோ டெவலப்பர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது அனைத்து

Vojer - இந்த செயலி மூலம் உயர் தரத்தில் குரல் அழைப்பு சேவைகளை பெறமுடியும். அதற்கு இணைய வசதிகள் தேவையில்லை . உங்கள் தகவல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். முக்கிய தகவலை அனுப்பவதற்காக வைஃபை, புளூடூத், மைக்ரோஃபோன் மற்றும் கேமராவை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் என அந்த மென்பொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Bridgefy - இது ஆஃப்லைனில் செயல்படும் மற்றொரு செயலியாகும். நீங்கள் ஒரு இசை நிகழ்வு, இயற்கை பேரழிவு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இதை பயன்படுத்தலாம்.

இந்த செயலி பயனருக்கான சேவைகளை மூன்று வழிகளில் வழங்குகிறது. மெஷ் பயன்முறையைப் பயன்படுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளலாம், நீங்கள் வைஃபை சிக்னலை உருவாக்குவதன் மூலம் பல நபர்களுடன் இணைக்க முடியும்.

மூன்றாவது ஒளிபரப்பு பயன்முறையாகும். இது உங்கள் அருகிலுள்ள எவரும் செய்திகளைக் காண அனுமதிக்கிறது. இது செயலியாகவும் மென்பொருளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read: #CAB2019 : ராணுவக் குவிப்பு, இணைய சேவை ரத்து - அசாமை அடுத்த காஷ்மீராக மாற்றுகிறதா மோடி அரசு?

Briar – பிரியர்

இணையம் செயலிழக்கும்போது இந்த பயன்பாடும் தானாக செயல்படும். இது புளூடூத் அல்லது வைஃபை வழியாக பயன்படுத்தலாம், மேலும் பயனர்களையும் அவர்களிடம் தொடர்புகளை பாதுகாக்கிறது என அந்நிறுவனம் கூறுகிறது. இது செயலியாகவும் மென்பொருளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Manyverse - எனப்படும் செயலி மூலம் உள்ளூர் வைஃபை மற்றும் ஹாட்ஸ்பாட் (Local WiFi Hotspot) மூலம் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. இதன் செயலியை தமிழ்நாடு ஃப்ரி சாப்ட்வேர் பவுண்டேசன் (FSFTN - Free Software Foundation Tamil Nadu) என்ற அமைப்பு பயன்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதுபோல தொடர் இணைய துண்டிப்புக்கு மாற்று ஏற்பாட்டை மக்கள் மத்தியில் தெரிவித்து வரும் ஃப்ரி சாப்ட்வேர் பவுண்டேசன் நிர்வாகி பாலாஜி அவர்கள் கூறுகையில், “இணைய வசதியையும், தொடர்பையும், தகவல் பரிமாற்றத்தையும் அதிகார வர்க்கம் துண்டித்துள்ள இந்த சூழ்நிலையில் நமக்கான தொழில்நுட்பம் எது என்பதை கண்டறியும் காலம் வந்துள்ளது.

இத்தனை நாட்கள் நாம் பயன்படுத்திய தொலைத் தொடர்பு செயலிகள் இது போல சூழ்நிலையில் தான் யார் கட்டுப்படுத்துகின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

குறிப்பாக நமக்கான தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டுமெனில், தனி ஒரு நிறுவனத்தின் கையிலோ, அதிகார வர்கத்தின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல், மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் வைக்கப்படும் கட்டற்ற மென்பொருளாக இருக்க வேண்டும். அறிவுசார் பயன்பாட்டிற்கு, எந்த வித தடைகளும் தடுப்புகளும் இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்ட இணைப்புகள், உருவாக்கப்பட்ட செயலிகள், படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மக்களுக்காக இருக்கவேண்டும். ஆனால் இது எதுவுமே தற்போது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.