India
தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை நிறுத்துக : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி!
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை நிறுத்துமாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர், இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு.
அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாகவும் இயற்றியுள்ளது. இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போர்க்கொடிகள் தூக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை இயற்றமாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநில முதலமைச்சர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இந்த குடியுரிமை சட்டத்தால் வடகிழக்கு மாநில மக்களே வெகுவாக பாதிக்கப்படுவதால் அசாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் துணை ராணுவத்தை ஏவி வன்முறையில் ஈடுபடுத்தி வருகிறது.
மேலும், மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியே முன்னிலை வகித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல, கேரளாவில் சனாதன அமைப்புகளுக்கு எதிராக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை இயற்றிய கையோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவரவுள்ளது பாஜக. அதன்படி, மக்களின் பூர்வீகம் கணக்கெடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் குடியுரிமையை நிராகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒன்று.
தற்போது, இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மேற்கு வங்க மாநில கூடுதல் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தவும். அரசு உத்தரவின்றி எந்த பணிகளும் நடைபெறக் கூடாது. பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!