இந்தியா

"நான் உயிரோடிருக்கும் வரை உங்களால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது” - மம்தா பானர்ஜி சூளுரை!

“நான் உயிரோடு இருக்கும்வரை குடியுரிமைச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டேன்” என்று சூளுரைத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

"நான் உயிரோடிருக்கும் வரை உங்களால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது” - மம்தா பானர்ஜி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“நான் உயிரோடு இருக்கும்வரை குடியுரிமைச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டேன்” என்று சூளுரைத்துள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கொல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கானோருடன் ஏறக்குறைய 4 கி.மீ தொலைவுக்கு பேரணியாகச் சென்றார் மம்தா பானர்ஜி. பேரணியின் முடிவில் பேசிய அவர், “நம் மாநிலத்துக்கு வெளியில் இருந்து சில சக்திகள் பா.ஜ.கவிடம் பணம் பெற்று தற்போது மாநிலத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

பா.ஜ.க மற்ற மாநிலங்களுக்கு அறிவுரை சொல்லும் முன், சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் முன், வடகிழக்கில் தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கட்டும்.

"நான் உயிரோடிருக்கும் வரை உங்களால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது” - மம்தா பானர்ஜி சூளுரை!

போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த விடமாட்டேன். என் அரசை டிஸ்மிஸ் செய்தாலும் சரி; என்னைச் சிறையில் தள்ளினாலும் சரி; நான் ஒருபோதும் இந்த கறுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன். இந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக முறையில் போராடுவேன்.” எனச் சூளுரைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories