India
#CAB2019 : அடுத்த காஷ்மீரா அசாம் ? - போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி - 11 பேர் படுகாயம் !
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அசாம், திரிபுராவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.
இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானார் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால் அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரை அடுத்து தன்னுடைய அரசு அதிகாரத்தை அசாம் மாநிலத்திலும் பா.ஜ.க அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!