India

“சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் விரைவில் ‘கேப் டவுன்’ நகரை போன்று மாறும்” : ஏன் தெரியுமா? #ShockReport

கடந்த 2017-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகர் கேப் டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் நாடுமுழுவதும் உள்ள மக்கள் மிகுந்த சிறமங்களை சந்தித்தனர். இதனையடுத்து, தண்ணீர் சேமிப்பு, நீர் மேலாண்மை போன்ற தண்ணீர் பயன்பாட்டை மக்கள் உணர்ந்துக்கொள்ள பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் மிகமுக்கிய நடவடிக்கையாக நாடுமுழுவதும் ‘ஜீரோ டே’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட நாளன்று அங்குள்ள அனைத்து குழாய்களை மூடி தண்ணீரை சேமித்தனர்.

இதனைச் சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் சிங் ஷெகாவத் கூறுகையில், “அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கம், நகர மயமாதலால் மக்கள் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த தவறுகின்றனர். அதனால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வற்றிவிடுகிறது.

இதனால் மக்களும் தங்களின் தண்ணீர் தேவைக்கு குடிநீர் தொட்டிகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலை இன்னும் நீடிக்குமானல், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் இன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகள் விரைவில் `கேப் டவுன்’ நகரை போன்றதாகி விடும். என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி சுவதேந்தர் குமார் கூறுகையில், “இந்தியாவில் மழைக் காலங்களில் சுமார் 1068 மில்லியன் மீட்டர் மழை நீரால் 4 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. அப்படி கிடைத்த போதிலும், இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறையவில்லை.

அதே சமயம், ஆண்டு முழுவதும் 100 மில்லியன் மீட்டர் மழை பெறும் இஸ்‌ரேல் நாட்டில் அபரிமிதமாக தண்ணீர் உள்ளது. அதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகில் நிலத்தடி நீரை மிகவும் சார்ந்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் வெறும் 300 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் மட்டுமே சேமிப்பில் இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீர் சேமிப்பில் கவனம் செலுத்துவது போல, அரசும் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தவேண்டும். அதற்கான திட்டமிடலை அரசு வகுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.