India
பொருளாதார மந்தநிலை குறித்து சிவசேனா கேள்வி : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ?
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பாஜக, சிவசேனா இடையில் கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா இதழில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தி திரைப்படமான ஷோலேவில் வரும் “இத்தனை மவுனம் ஏன்?” என்ற வசனத்தை தலைப்பாக வைத்து தலையங்கத்தை வெளியிட்டுள்ளது சிவசேனாவின் சாம்னா.
அதில், “நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய அரசு ஏன் அதீத மவுனம் சாதிக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வர்த்தகத் துறையில் உள்ள அனைத்து பொருட்களின் விற்பனையும் 300 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆட்டோ மொபைல், உணவு உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி குறைந்ததால் பணியாட்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இந்திய நிறுவனங்களை விடுத்து ஆன்லைன் மூலம் அந்நிய நாட்டினர் வர்த்தகம் செய்து இந்தியப் பணத்தை சம்பாதித்து வருகின்றன.
இது போன்ற விவகாரங்கள் அனைத்துக்கும் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையும் தான் காரணம் என சாடியுள்ள சிவசேனா, இவற்றில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்? இதனைத் தவிர மோசமான நாட்கள் ஏதும் இந்திய தேசத்துக்கு வரப்போகிறதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!