India
“இந்தியாவின் ஜிடிபி 7.3% இருந்து 6.1%ஆக குறைந்துள்ளது - ஐ.எம்.எப் கணிப்பு” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.
மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக உலக பொருளாதாரக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்தது. அதில், இந்தியா வங்கதேசம், நேபாளத்தை விடவும் பின்தங்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 6.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் ஜி.டி.பி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், “இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளது. தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது பொருளாதாரம் விரைவில் மீட்சியடையும் என உறுதியாகக் கூற முடியாது.” என அவர் தெர்வித்துள்ளார்.
Also Read
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!