India

“மோடி என் பேச்சைக் கேட்பதே இல்லை; சீனாவுக்கே போய்விடலாம்”: சுப்ரமணியன் சுவாமி அதிருப்தி! 

பிரதமர் மோடி, பொருளாதாரம் தொடர்பான தனது ஆலோசனைகளை கேட்க மறுப்பதாக, பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி வருத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “மோடி என் ஆலோசனைகளைக் கேட்காத நிலையில் இங்கு இருப்பதற்குப் பதிலாக சீனாவுக்குப் போய்விடலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

“சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகம், செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் உரையாற்ற என்னை அழைத்துள்ளது. ‘சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு’ என்ற தலைப்பில் நடைபெறும் அந்தக் கருத்தரங்கில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்துள்ளனர்.

ஆனால், பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்கத் தயாராக இல்லை. நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்” எனத் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.