DMK Government
”இது பெரியாரின் அரசு என்பதற்கு தி.மு.கவின் 100 நாள் ஆட்சியே சாட்சி” - திருமாவளவன் எம்.பி. புகழாரம்!
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து சமூக நீதி நாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்த அவர், பெரியார் தனி நபர் அல்ல; அவர் ஒரு கோட்பாடு. பெரியாரை எதிர்ப்பதாக நினைத்துதான் திமுகவை எதிர்க்கிறார்கள். அண்ணாவை எதிர்க்கிறார்கள். கலைஞரை எதிர்க்கிறார்கள் என கூறினார்.
பெரியார் எதிர்ப்பு என்பதுதான் சனாதன சக்திகளின் மிக முக்கிய கோட்பாடாக உள்ளது. விளிம்பு நிலை மக்களை முன்னேற செய்தவர், இடஒதுக்கீடு மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற்று முன்னேற செய்தவர் தந்தை பெரியார். இவறையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் பெரியாருக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வருகின்றார்கள்.
பெரியாருக்கு சிலை எதற்கு என கேட்பவர்கள் பெரியாரை சிதைக்க பார்கிறார்கள். அது சனாதனத்திற்கு துணையாக நிற்கும் என்பதை தமிழ் தேசிய உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார். கடந்த ஆட்சியில் பெரியாரை அம்பேத்கரை அவமதித்தர்வகளை கட்டுப்படுத்த வேண்டும், அவர்கள் மீது வழக்கு இருந்தால் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு தி.மு.க அரசு அல்ல. பெரியார் அரசு என்பதற்கு 100 நாள் ஆட்சியே சாட்சி. சாதி ஒழிப்பு நாளை சமூக நீதி நாள் என துணிச்சலுடன் அறிவித்த முதல்வரை விடுதலை சிறுத்தைகள் பாரட்டுகிறது.
அதிமுக ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடியது அனைவருக்கும் தெரியும். ஊழல் செய்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. ஆனால் அதிமுகவினர் அரசியல் பழிவாங்கல் என லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை திட்டமிட்டு திசைத்திருப்பி வருகின்றனர் என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!