DMK Government

'கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம்' - அசத்தலான திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்செந்தூர் - சமயபுரம் - திருத்தணிகை ஆகிய கோயில்களில் முப்பொழுதும் அன்னதானத் திட்டத்தினை காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டின் கீழ் திருச்சி சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய மூன்று கோயில்களிலும் முழுநேர அன்னதான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து கோயில் மண்டபங்களில் தலைவாழை இலை போட்டு ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், வடை, பாயாசம், தண்ணீர் பாட்டிலுடன் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

மேலும் தற்போது கொரோனா காலமாக இருப்பதால், சாப்பிட வரும் பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முக கவசங்கள் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது.

இன்று முதல் வரும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பக்தர்கள் பசிபோக்க உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பணியாளர்கள் சுழற்சி முறையில் உணவு தயாரித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

Also Read: “சமூகநீதியை கண்காணிக்க குழு; சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நடவடிக்கை”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!