DMK Government
“தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும்; மு.க.ஸ்டாலின் முதல்வராவார்” - TimesNow கருத்துக்கணிப்பில் தகவல்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து, பிரச்சாரத் திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 65 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க கூட்டணி 43.2% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 32.1% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏபிபி-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே வெகுவான அதிருப்தி நிலவுவதாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துச் செயல்படுவதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!